கனடா- லொட்டோ மக்ஸ் மற்றும் லொட்டோ6/49 இணைந்த இந்த வார பரிசுத்தொகை கிட்டத்தட்ட 100மில்லியன் டொலர்கள் என ஒன்ராறியோ லாட்டரி மற்றும் கேமிங் கூட்டுத்தாபனம் மதிப்பிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை லொட்டோ மக்ஸ் சீட்டு 50மில்லியன் டொலர்கள் பெறுமதி மிக்கது. அத்துடன் ஒவ்வொன்றும் 1-மில்லியன் டொலர்கள் பெறுமதியான 11 மக்ஸ்மில்லியன் பரிசுகள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே சமயம் லொட்டோ 6/49 ஜாக்பொட் ஒரு மதிப்பீட்டின் படி 35மில்லியன் டொலர்கள் எனவும் அத்துடன் 1-மில்லியன் டொலர்கள் சீட்டிழுப்பும் உத்தரவாதமென கூறப்படுகின்றது. இரண்டு ஜா
க்பொட்களும் 97-மில்லியன் டொலர்கள் பெறுமதிவாய்ந்தவை என ஒன்ராறியோ லாட்டரி மற்றும் கேமிங் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
 
Top